பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொழும்பில் 16 வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமையவே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஊடாக கொழும்பு நகரில் 16 வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகருக்கு உட்பிரவேசிக்கும் பகுதிகளில் இந்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்கு பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்குமான பொலிஸ் ஊரடங்கு அனுமதி பத்திரம் மற்றும் வாகன அனுமதி பத்திரம் என்பன குறித்த இடங்களில் நிச்சயமாக கண்கானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 20 ஆம் திகதி மாலை 06 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு கடந்த 24 அன்று மட்டுமே தளர்த்தப்பட்டது.
அதன் பின்னர் குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.