மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
காணி பிரச்சினையொன்றில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிராம சேவகர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தமைக்கு எதிராகவே குறித்த தேரர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதன்போது குறித்த தேரர் கிராம சேவகரிடம் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்த காணொளி வெளியாகியுள்ள நிலையில், தேரரின் செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.