கிழக்கு மாகாணசபையின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
இந்த வரவுசெலவு திட்டம் மூலம் கிழக்கு மாகாணம் பாரிய வெற்றியைப்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பாரியளவு நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,
இன்று இலங்கைக்கு முன்னுதாரணமான ஆட்சியை கிழக்கு மாகாணசபை மேற்கொண்டுவருகின்றது.அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சிய செய்யமுடியும் என்ற யதார்த்ததை இந்த நாட்டுக்கு உணர்த்தியுள்ளோம்.
திறந்த மனதுடனும் எந்தவித நயவஞ்சகமும் இல்லாமல் மேற்கொள்ளும் ஆட்சி காரணமாக இந்த நல்லாட்சியை நாங்கள் செய்துகொண்டு செல்கின்றோம். அதன் காரணமாக இன்று நாங்கள் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த ஆண்டு கல்விக்காக மட்டும் 7500 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் நிதியொதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.
நல்லாட்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு முன்னுதாரணமான ஆட்சியை நடாத்தி வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
காத்தான்குடி அமானா சிறுவர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.