அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை சமூக விலகல்

378 0

அமெரிக்காவில் வரும் ஏப்ரல்30-ம் தேதி வரை சமூக விலகல் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1,42,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அமெரிக்கா முழுவதும் இதுவரை 2,479 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த15 நாட்களுக்கு முன்பு சமூக விலகல் கட்டுப்பாடு அமல் செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது: அடுத்த 2 வாரங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும். வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் 30-ம் தேதி வரைகட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

கரோனா வைரஸுக்கு எதிராகஅமெரிக்கா போரில் ஈடுபட்டிருக்கிறது. இந்த வைரஸ் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நியூயார்க்கில் முகக்கவசங்கள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தவறிழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.