கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை நலகி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்கும் நோக்கிலும் சமூக நலன் சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும் கடந்த 23 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த விசேட நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 100 மில்லியம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்
மேலும் இலங்கை நிர்வாக சேவை சங்கம் 2.5 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி செயலகம் 2 இலட்சம் ரூபாவையும், இலங்கை பொறியியல் சேவைகள் சங்கம் 6.5 மில்லியன் ரூபாவையும், கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் 2.5 மில்லியனையும், அரச சேசை பெறியியல் சங்கம் சார்பில் 3 மில்லியனும், இலங்கை பொறியியல் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாயும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 5 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளார்
இதற்கமைய அந்த நிதியத்திற்கு இதுவரை 140 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கப்படும் பணம் நிதி மற்றும் வங்கி ஆகிய துறைகளில் திறமையான நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்படும்.
நாட்டில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரி சேவைகளை இலகுபடுத்துவதை நோக்காக கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் விசேட நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
´கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்´ என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 100 மில்லியம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியில் 85737373 என்ற கணக்கு இலக்கமும் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கொடையாளர்கள் ´கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதிபங்களிப்பு செய்ய முடியும்.
இவ்வாறு நிதி பங்களிப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு வரி மற்றும் அந்நிய செலாவணி விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
காசோலைகள் மற்றும் தந்தி பரிமாற்றங்கள் ஊடாக இந்த நிதியத்திற்கு பணத்தை வைப்பில் இட முடியும்.
கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கப்படும் பணம் நிதி மற்றும் வங்கி ஆகிய துறைகளில் திறமையான நிபுணர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த நிதியத்திற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கிகளின் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், முன்னணி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றால் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க முடியும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்