கொவிட்-19 வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்க நேர்ந்துள்ள பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக வீடியோ காணொளிகளை ஒளிபரப்பும். சிறுவர்களும், வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்களும் வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்க நேர்ந்துள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய உளவியல் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கவுன்சிலிங் சேவைகளை வழங்குகிறது.