ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரம் குறித்த ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் தொடர்பில் பதிவு செய்யாதவர்கள் தம்மை பதிவுசெய்ய நாளை (01) நண்பகல் வரை மாத்திரமே அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.