தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்!

266 0

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தாம் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து, தமது கிளினிக் இலக்கத்தை கூற வேண்டும்.

பெயரை கூறவும். அடுத்ததாக முகவரியை கூற வேண்டும். தொடர்பை ஏற்படுத்தக்கூடிய தொலைபேசி இலக்கத்தை கூற வேண்டும். அதனை தொடர்ந்து உங்களின் மருந்துகள் பொதி செய்யப்பட்டு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் ஒருவர் அவிசாவளையில் இருக்கக்கூடும். அவ்வாறானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று, உங்களின் கிளினிக் புத்தகத்தை காண்பிக்க வேண்டும்.

அப்போது குறித்த வைத்தியசாலையின் ஊடாக வழங்கக்கூடிய மருந்துப்பொருட்களை வழங்கப்படும்.

கிளினிக் செல்லும் வைத்தியசாலைக்கு அழைப்பை ஏற்படுத்தி மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.