வீரவன்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

320 0

wimal-weeravansa-1தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனம் ஒன்றை தவறாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக வீரவன்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்