வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் நிதி தீர்வு விவகாரங்களை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்ததாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி தீர்வு சட்டத்தை மீறும் இந்த வரவு செலவு திட்ட முன்மொழிவு குறித்து நீதித்துறையின் உதவியை கோருவதற்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.