மொசூல் நகரில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் பலி

321 0

201611130528021900_isis-imposes-curfew-in-mosul-after-killing-of-senior-leaders_secvpfமொசூல் சண்டையில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என கருதப்பட்டு வந்த மக்மூத் சுக்ரி அல் நுயைமி பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து மீட்பதற்காக, அந்த நாட்டின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையினால் அந்த நகரத்தை சேர்ந்த சுமார் 47 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
தற்போது அங்குள்ள மக்கள், ஈராக் படையினர் சொல்கேட்டு வீடுகளுக்குள் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்த ஐ.எஸ். அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக வீடுகளுக்குள் பாதுகாப்பாக உள்ள மக்களிடம் கூட ஒருவிதமான பயம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே மொசூல் சண்டையில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என கருதப்பட்டு வந்த மக்மூத் சுக்ரி அல் நுயைமி பலியாகி விட்டார்.இவர் மேற்கு மொசூலில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூட்டுப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் சிக்கி பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.இவர் சதாம் உசேன் ஆட்சிக்காலத்தில் புலனாய்வு பிரிவில் உயர்நிலை அதிகாரியாக பதவி வகித்துவந்தவர் எனவும் கூறப்படுகிறது.