அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு எதிராக கையெழுத்து வேட்டை

323 0

201611131009314363_america-trump-president-against-signatures_secvpf-1அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு தேர்வாளர்கள் வாக்களிக்க கூடாது என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

இருந்தாலும் அவர் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகிறது. டிரம்பை அதிபராக ஏற்க மாட்டோம் என்ற வாசகங்கள் அடங்கிய ‘பேனர்’களை ஏந்தியபடி வீதிகளில் திரண்டு மக்கள் போராடுகிறார்கள்.

அமெரிக்க சட்டப்படி அதிபர் தேர்தலில் மக்கள் ஓட்டுகளை பெற்று இருந்தாலும் தேர்வாளர்கள் எனப்படும் ‘எலெக்டோரல் காலேஜ்’ வாக்குகளை பெறுபவர்தான் அதிபராக முடியும்.

அதன்படி பார்த்தால் வெற்றிக்கு தேவையான 230 தேர்வாளர்களை விட கூடுதலாக அதாவது 276 தேர்வாளர்களை டிரம்ப் பெற்று இருக்கிறார்.

இதற்கிடையே அதிபரை தேர்வாளர்கள் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற டிசம்பர் 19-ந் தேதி நடக்கிறது.

அப்போது அமெரிக்கா முழுவதும் உள்ள 538 தேர்வாளர்கள் ஓட்டு போட உள்ளனர். இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக பொது மக்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் டிரம்ப் அதிபராவதற்கு தேர்வாளர்கள் ஓட்டு போடக்கூடாது. ஏனெனில் அவர் மிகப் பெரிய அதிபர் பதவிக்கு தகுதியற்றவர். செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவு தெரிவித்து 32 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். இன்னும் கையெழுத்து வேட்டை தொடர்ந்து நடக்கிறது.