ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை

318 0

201611130541314584_opanneerselvam-led-by-ministers-officials-consultancy_secvpfஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஒரு மணி நேரம் நடந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இலாகாக்களை நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார். தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் அமைச்சர்கள் அனைவரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் டி.ஜி.பி. (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் மூத்த அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வந்தார்.
தலைமைச் செயலாளர் கூட்ட அரங்கத்தில் மதியம் 12 மணிக்கு கூட்டம் கூடியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது. சென்னை, சுற்றுப்பகுதியில் உள்ள கூவம் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.