வெள்ளவத்தை – மாயா மாவத்தையில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து களவாடி தப்பிச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை கம்சபா சந்தியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை அவர்கள் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட வேளை, குறித்த வர்த்தக நிலையில் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் வரையில் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஹெப்பாவலை மற்றும் நுகேகொடையைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.