அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ள அடையாள வேலை நிறுத்தத்திற்கு மேலும் சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன. இலங்கை பல்மருத்துவ சங்கம் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சங்கம் ஆகியனவும் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா கூறினார்.
இது தவிர, அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் மற்றும் சுகாதார சேவைகளின் மேலும் சில தொழிற்சங்கங்களும் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி அந்த சங்கங்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பரந்தளவிலான அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கூறினார்.