தென் கொரிய ஜனாதிபதி பார்க் குன் ஹை மீது அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்த அமைதி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதிக்கு நிழல் வழிகாட்டியாக இருந்த சோய் சூன்-சில் ஜனாதிபதியை தவறாக வழிகாட்டியமைக்காக தற்போது தடுப்புக்காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.