இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மீனவர்களின் கருத்துக்கள் தொடர்பில் எந்த நம்பிக்கையும் இல்லை என வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்தியாவில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதில்லை என்று இனக்கம் வெளியிட்டிருந்தனர்.
எனினும் அதனை அவர்கள் கடைபிடிப்பதில்லை என்று வடக்கு மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பேச்சு வார்த்தையில் வடக்கு மீனவர்கள் சார்பில் பங்குகொண்ட எம்.என். ஆலம் இதனை தெரிவித்தார்.