நாடு கடந்த குற்றங்களை தடுக்க இலங்கை இந்தோனேசியா கலந்துரையாடல்

312 0

sri-lanka-eu-flags-720x480நாடு கடந்த குற்றங்களை தடுப்பது குறித்து இலங்கையும் இந்தோனேசியாவும் கலந்துறையாடல் மேற்கொண்டுள்ளன.

இருநாட்டு உயர் மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு எல்லைகளில் ஊடாக இடம்பெறும் நாடு கடந்த குற்றங்களைகட்டுப்படுத்த புலனய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

இன்டபோல் எனப்படும் சர்வதேச குற்றவியல் காவல்துறை அமைப்பின் 85வது பொதுச் சபை அமர்வு இந்தோனேசியாவில் இடம்பெற்றது.

அதில் பங்குக்கொள்ளச் சென்ற இலங்கையின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இந்தோனேசிய உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.