அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே, அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரப் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையுடனான உறவு எவ்வாறு இருக்கப்போகிறது என, த ஹிந்து பத்திரிகை, வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீரவிடம் கேள்வி எழுப்பியது.
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அமெரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாகவும், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அந்த உறவு மேலும் விரிவடையும் எனவும் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளிட்டுள்ளார்.
இலங்கை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதியில் இருந்து சர்வதேசத்துடனான உறவை மேம்படுத்த மீண்டும் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, அமெரிக்காவுடன் கடந்த 20 மாதங்களில் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த தாம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.