நாளை சுப்பர் மூன்

302 0

super-moon-720x405நாளைய தினம் சுப்பர் மூன் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கையிலும் தெளிவாக காண முடியும் என கொழும்பு வானியல் ஆராய்சி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் மூன் எனப்படும் பெரு முழுநிலவு என்பது, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சராசரியாக உள்ளதைவிட சற்று குறைவாகவும் முழுநிலவு கூடிய தினமாகவும் காணப்படுவதாகும்.

இந்த தினத்தில் நிலவு இயல்பாக இருப்பதைவிட முழுநிலவு சற்று பெரியதாகவும் பொலிவு அதிகரித்தும் காணப்படும்.

நாளைய தினம் தோன்றும் சுப்பர் மூன் ஆனது, அடுத்ததாக 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதியே மீண்டும் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.