யாழ் மாவட்ட செயலகத்தில் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்(காணொளி)

454 0

new-picture-2கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிலும் தெற்கிலும் பல்வேறு கருத்தியலாளர்கள் மத்தியிலும் பல்வேறு இனப்பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் புரிந்துணர்வின்மையும் நம்பிக்கையீனத்தையும் நட்புறவான கருத்துபரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களினூடாக ஒழிப்பதற்கு தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆரம்ப அணுகுமுறையாக நல்லிணக்க அமைச்சினால் கைகோர்ப்பு எனும் நிகழ்வு மூன்று நாள்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கென மாத்தறை மாவட்டத்திலிருந்து ஒரு குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கள உத்தியோகத்தர்கள், சங்கங்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தினைச்சேர்ந்த பொதுமக்கள் 40 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளில் வருகை தருவோரை தங்க வைக்கவும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபடுத்தவும் யாழப்பாண மாவட்ட செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.