மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் சந்தேகநபர்களை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் ஐவரும் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.