வரவு செலவுத் திட்டம் தமிழருக்கு ஏமாற்றம்!

349 0

206525375611112017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இவ் வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ் வரவு செலவுத் திட்டத்தில் வருவாய் அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பல வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை வழமையான வரவு செலவுத் திட்டங்கள் போன்று இம்முறையும் வடக்கு, கிழக்கில் மக்களின் மீள்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்எழுச்சி என்பவை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக இல்லை எனவே இவ் வரவு செலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே எற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.