ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

257 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய பதவிக்காலத்தினை நீடிக்கும் உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு சாட்சி விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 இற்கும் மேற்பட்டோரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.