புதிய அரசியல் அமைப்பின் பிண்ணனியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் இதன்போது கருத்து தெரிவித்த அவர்,அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பது மதங்களுக்கு இடையில் எந்த பிரச்சினையினையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை நல்லாட்சி அரசு கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துள்ள தமிழ் மக்களுக்கு, இது தீர்வை பெற்று கொடுக்கும் ஒரு அரசியல் அமைப்பாக காணப்பட வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.இன்றும் படையினரின் அடக்கு முறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
போர் முடிந்து பல வடருடங்கள் கடந்து விட்ட பின்னரும் முல்லைத்தீவு, மன்னர் போன்ற பகுதிகளில் கடற் படையினரின் அடக்கு முறை தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.கரையோர பகுதிகளில் இராணுவத்தின் அடக்கு முறையும், இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதியில் புலனாய்வு துறையினரின் அடக்கு முறையும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடற்படையினரின் அடுக்கு முறை தொடர்வது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை.
இதேவேளை, தென் இந்திய மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது.இவ்வாறான பிரச்சினைகளுக்கு கட்டாயம் நல்லாட்சி அரசினால் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.