யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபை சட்டத்தை மீறி செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்க ளில் 749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்ட மாக அறவிடப்பட்டுள்ளது என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி தா.வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களல் பாவனையாளர் அதிகாரசபை யின் அதிகாரிகளால் கடந்த 10 மாத காலமாக மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் சில கடை உரி மையாளர்களுக்கு எச்சரிக்கையும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டன.
அதில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை, நிறைகுறைந்த பாண் உற்பத்திஇ சுற்றுத்துண்டுகள் மாற்றம் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்தமை, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்ப ட்டு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட் டன.
யாழ்.மாவட்டத்தில் உள்ள அந்தந்த நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் குற்றங்களை ஒப்புக்கொண்ட தன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டது.
அந்த வகையில் ஜனவரி மாதம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 இலட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாவும்இ பெப்ரவரி மாதம் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவும், மார்ச் மாதம் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 இலட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாவும், ஏப்ரல் மாதம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும், மே மாதம் 64 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 2 இலட்சத்து 95 ஆயி ரம் ரூபாவும்இ ஜூன் மாதம் 85 வழக்குகள் பதிவு செய் யப்பட்டு 3 இலட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாவும், ஜூலை மாதம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவும், ஓகஸ்ட் மாதம் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாவும்இ செப்டெம்பர் மாதம் 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும், ஒக்டோபர் மாதம் 77 வழக்குகள் பதிவு செய் யப்பட்டு 5 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இதில் விற்பனை நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமையினாலேயே அதிகளவான கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.