சீனாவில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை

310 0

201611112304471937_election-violation-admk-and-dmk-complaint-in-tanjore_secvpfசீனாவில் கொலை, ஊழல் வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சீனாவில் இன்னர் மங்கோலியா பகுதியில் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் ஜாவோ லிபிங்.இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், லி என்ற பெண்ணை கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து, பின்னர் உடலை எரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொலை செய்யப்பட்ட பெண், அவரது மனைவி எனவும் கூறப்படுகிறது. ஜாவோ லிபிங்கின் ஊழலை அம்பலப்படுத்தி விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியதை தொடர்ந்துதான் இந்த கொலை நடந்திருக்கிறது.

மேலும் ஜாவோ லிபிங் ஊழல் செய்து 2 லட்சத்து 90 ஆயிரம் டாலர் சம்பாதித்ததாகவும், தனது அலுவலகத்தில் சட்ட விரோதமாக 91 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது ஷான்சி மாகாணத்தில் உள்ள டாய்யுவான் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, ஜாவோ லிபிங் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.