தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பணம் எடுத்துள்ளனர். சிறிய தொகைக்கான நோட்டுகள் அதிகம் எடுக்கப்பட்டதால், அவை சீக்கிரமே முடிந்து விட்டன. எனவே ஏ.டி.எம். மையங்கள் தொடர்ந்து இயங்காத நிலை ஏற்பட்டது.
ஆனால் இந்த நிலை அடுத்த வாரம் சீராகிவிடும். எந்தத் தடையும் இல்லாமல் ஏ.டி.எம். மையங்களில் இருந்து அனுமதிக்கப்பட்ட தொகையை பெறலாம். நாளை மற்றும் நாளை மறுநாளில் (12, 13-ந்தேதிகளில்) அனைத்து வங்கிகளும் இயங்கும். சென்னையில் உள்ள இந்தியன் ரிசர்வ் வங்கி மூலம் கடந்த 2 நாட்களில் மூவாயிரம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.