அங்கவீனமான இராணுவ வீரர்கள் சம்பந்தமாக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க இது தொடர்பில் நாளை உரையாற்றுவார் என்றும் பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன் அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ள நிலையில், இவ்வாறான நிலமையை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் தொடர்பிலும் கண்டறுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
“இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இருந்தது. அவர்கள் கேட்பதை கொடுத்த பின்னர் இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. அங்கவீனமான இராணுவ வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறு என்பதுடன் அவர்களை தூண்டிவிட்டு பிரச்சினைகளை உருவாக்கியதும் தவறு” இவ்வாறு பிரதமர் கூறினார்.