எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டதன் காரணமாக கனியவளத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
குறித்த சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையின் இணைப்பாளர் சேதிய ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கனிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைக்காக சீன நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பிரிவு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சீன நிறுவனத்தின் எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக இலங்கையில் எரிபொருட்களின் விலையை ஒருபோதும் குறைக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்;டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.