ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் பொலிஸார் இணைந்து இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர ஏற்கனவே ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 06 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 16ம் திகதி வரை ஆறுபேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.