வவுனியாவில் மதுபாவனை அதிகரிப்பு

399 0

alcoholwinebottles_largeவவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 13 இலட்சத்து இருபத்தொட்டாயிரத்து ஐநூற்று ஐந்து லீற்றர் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பியர் வகைகள் ஆறு லட்சத்து அறுபத்தேழாயிரத்து முப்பத்து நான்கு லீற்றரும்,

உள்நாட்டு சாராய வகைகள் ஆறு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து நூற்று இருபத்தைந்து லீற்றரும்,

பிஸ்கி வகைகள் மூவாயிரத்து எழுநூற்று அறுபத்தொரு லீற்றரும்,

பிறண்டி வகைகள் ஒன்பதாயிரத்து அறுநூற்று எண்பத்தொன்பது லீற்றரும்,

ஜின் வகைகள் மூவாயிரத்து நாற்பத்து இரண்டு லீற்றரும்,

ரம் வகைகள் ஆயிரத்தி நூற்றி நாற்பத்தி மூன்று லீற்றரும்,

வொட்கா வகைகள் எண்ணூற்று இருபத்தேழு லீற்றரும்,

வைன் வகைகள் எண்ணூற்று எண்பத்து நான்கு லீற்றரும் விற்பனையாகியுள்ளன என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பியர் வகைகளே அதிகமாக விற்பனையாகியுள்ளன.

வவுனியாவில்; ஒரு இலட்சத்து 71 ஆயிரம் மக்கள் வாழும் நிலையில் வெளி மாவட்ட மக்கள் வவுனியாவிற்கு வந்து செல்கின்றமையினால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.