பராக் ஒபாமாவும்-டொனால்ட் ரம்பும் சந்தித்தனர்(காணொளி)

453 0

sequence-01-still005அதிகார மாற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம் என்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த பராக் ஒபாமா, சிறப்பான விரிவான பேச்சுவார்த்தை தனக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

இருவரும் தனியாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெற்றி பெறக்கூடிய வகையில் அதிகார மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது முக்கியப் பணி என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆலோசித்ததாகவும், தனது குழுவுடன் இணைந்து அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து செயற்பட டிரம்ப் ஆர்வமுடன் இருப்பது குறித்து தான் ஊக்கமடைந்திருப்பதாக ஒபாமா குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்துவதை தான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

‘இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றிருந்தாலும், தன்னைப் பொறுத்தவரை இன்னும் நீண்ட நேரம் நடந்திருக்கலாம்’ எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘பல சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்ததாகவும், சில சம்பவங்கள் அருமையானவை என்றும், சில சம்பவங்கள் கடினமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமாவைச் சந்திப்பதற்காக, தனது சொந்த விமானத்தில் நியுயோர்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு ட்ரம்ப் சென்றிருந்ததுடன், அவருடன் மனைவி மெலானியாவும் உடன் சென்றிருந்தார்.

அத்துடன் அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷெல் ஒபாமைவையும் மெலானியா சந்தித்திருந்தார்.