தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் தாயகம் திரும்புகின்றனர்

325 0

tamil-refugees-in-tamilnaduதமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் வசித்துவரும் 41பேர் அடுத்த வாரமளவில் தாயகம் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான உயர் ஸ்தானிகரத்தின் தலையீட்டுடன் குறித்த அகதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தாயகம் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பவுள்ளவர்கள் மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகளில் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

2011ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து இதுவரை 5ஆயிரத்து 225 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாக இந்திய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 109 அகதி முகாம்களிலிருந்தும் ஒரு இலட்சம் வரையானவர்கள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.