தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்ததுடன் கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பு -நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.