வவுனியாவில் இடம்பெற்ற வங்கியின் பணப்பரிமாற்ற இயந்திரத்திருட்டு-நால்வருக்கும் விளக்கமறியல்

361 0

vavuniyaவவுனியாவில் வங்கியொன்றின் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரச வங்கியொன்றில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயத்திரத்தில் இரகசிய கமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் நால்வர் வவுனியா பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச வங்கியொன்றில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயத்திரத்தில் இரகசிய கமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இரகசிய கமரா மூலம் வாடிக்கையாளர்களின் இரகசிய இலக்கங்களை பெற்றுக் கொண்டு அதற்கமைய போலியான தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டைகளை தயாரித்து பணத்தை பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கணினி, கமரா, மற்றும் பல்வேறு 13 வகையான வங்கி பண அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, தோணிக்கல், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாக பொலிஸார் தெரிவித்தனர்.