அக்கரப்பத்தைனயில் மண்சரிவு அபாயம்-மக்கள் பீதியில்

327 0

download-1மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இப்பகுதியில் வாழ்ந்து வரும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக சில குடும்பங்ளை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

பலமுறை கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலகம், பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என இப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என குறித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.