யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆவா குழுவினர் என சந்தேகத்தின் பேரில் பலரைக் கைதுசெய்துள்ளனர்.
இதற்கமைய ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 13பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் என அழைக்கப்பட்ட இந்திரகுமார் கபிலோசன் மற்றும் அவரது சகோதரர் இந்திரகுமார் நிரூசன், மற்றும் திருச்செல்வன், பிரபூசன் ஆகியோர் கடந்த புதன்கிழமை நீதிபதி அருணி ஆட்டிக்கல முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரையில் ஆவா குழு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 13பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.