ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) யாழ். மாநகர சபை முதல்வர் ஆர்னோல்டை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக அவர் மாநகர முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எதிர்வரும் தேர்தல் உட்பட அரசியல் விவகாரங்கள் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.