டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன், டெலிபோன் கட்டணத்தை செலுத்துவதற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வட்டாரத்தில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி வாடிக்கையாளர்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் பழைய பணத்தை கொடுத்து கட்டணம் செலுத்தலாம். பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களிடம் உள்ள செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுக்களை கொடுக்கலாம்.
இந்த தகவலை முதுநிலை முதன்மை மேலாளர் (நிதி) தெரிவித்துள்ளார்.