ஐ.தே.க.வுடன் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுவோம் – ரஞ்சித்

219 0

சின்னம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளமுடியாவிட்டால், தொலைபேசி சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு 8 பேர் அடங்கிய வேட்புமனுக் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தமது தரப்புக்கு அறியப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினம் வேட்புமனுக் குழு கூடி அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.