தென்னாப்பிரிக்கா: ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

277 0

201611110929506923_s-africas-zuma-easily-survives-noconfidence-vote_secvpfஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்தது.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை பதவிநீக்கம் செய்ய ஆளும்கட்சியினர் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

கடுமையான வாக்குவாதத்துக்கு பின்னர் இந்த தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அதிபர் பதவியில் ஜேக்கப் ஜுமா நீடிக்க கூடாது என 126 எம்.பி.க்களும், நீடிக்க வேண்டும் என 214 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இந்த முடிவின்படி, அதிபர் ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்தது.