இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் எதிர்வரும் 15ஆம் திகதி சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னிலை ஆஜராகவுள்ளனர்.
இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய பல மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பல சர்வதேச அமைப்புகள் இந்த குழுவில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்காக இலங்கை குழுவினர் இன்று ஜெனிவா செல்கின்றனர்.
இந்த குழுவில் பொலிஸ் சட்ட பிரிவு பிரதானி, பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி சிசிற மென்டிஸ் ஆகியோர் இணைத்துள்ளனர்.
ஜெனீவா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழுக்களின் தலைவராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய செயற்படுகிறார்.
இலங்கையின் வெளிநாட்டு சேவையில் ஈடுபடும் ரொஹான் பெரேரா, நவிநாத் ஆரியசிங்க ஆகியோரும் ஜெனீவாவில் இந்த குழுவுடன் இணையவுள்ளனர்.