டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது-ரில்வின் சில்வா

316 0

downloadஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டமை, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

ட்ரம்ப்பினால் இலங்கைக்கு எதுவும் கிடைக்காது என்றும், தற்போது இருக்கும் கொள்கைகளே தொடர்ந்தும் இருக்கும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தாலும் இலங்கைக்கு எதுவும் கிடைக்காது என்று கூறினார்.

அமெக்காவின் தேசிய கொள்கைகள், நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்களை வைத்தே தீர்மானிக்கப்படுமே தவிர, அரசியல்வாதிகளை வைத்து அல்ல என்று ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்த, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலைச் செய்யப்பட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.