முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் புரிந்த அமைச்சர்களுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஒப்பு கொண்டுள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் சில அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து கோவைகள் தம்மிடம் இருந்தன.
அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது நல்லாட்சியில் அமைச்சர்கள் யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகள் அனைத்தையும் தம்மீது சுமத்திவிட்டு, தற்போது சிலர் சுத்தவாளிகள் என்று அறிவித்துக் கொள்கின்றனர் என்று மஹிந்த கூறியுள்ளார்.