யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவையும் இராணுவத்தையும் தொடர்புபடுத்தி தாம் கருத்து வெளியிடவில்லை என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆவாக் குழுவை உருவாக்கியமைக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுமே பொறுப்புக் கூற வேண்டும்.
எனினும் தாம் இராணுவம் இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டுள்ளது என்று கூறவில்லை.
ஆனால் தாம் இராணுவம் மீது குற்றம் சுமத்துவதாக கோட்டாபய ராஜபக்ஷவே கூறியுள்ளார்.
இது ஒரு நகைச்சுவையான விடயம்.
குற்றம் இழைத்தவர்கள் கூட ‘இராணுவ வீரர்கள்’ என்று கூறி தப்பிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் ராஜித்த கூறியுள்ளார்.