தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் இனப் பிரச்சினைகளுக்கு அடிப்படை தீர்வினை எட்ட முடியும் என தெரிவித்துள்ள அவர் எனினும், சில தரப்பினர் மொழிப் பிரச்சினை தீர்க்கப்படுவதனை விரும்பவில்லை என வருத்தம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.