லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.லண்டன் நகரில் டிராம் பேருந்து ஒன்று தன்னுடைய வழிதட பாதையில் இருந்து தடம் புரண்டு தலைகிழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
டிராம் பேருந்து நசுங்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான வாகனத்தில் 50-க்கும் அதிகமான மக்கள் பயணம் செய்தனர்.
தெற்கு லண்டனில் உள்ள முக்கிய ஜங்சன் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டீஸ் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.