அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புடன், ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புடன், ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் பேசினார்.அப்போது அவர், டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
இதுபற்றி டிரம்பின் பிரசார நிர்வாகி கெல்யன்னே கன்வே, தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது குறிப்பிட்டார்.அப்போது அவர், “ஜனாதிபதி ஒபாமாவுக்கும், டிரம்புக்கும் இடையேயான உரையாடல் மிகவும் இணக்கமாக இருந்தது. டிரம்பை ஜனாதிபதி ஒபாமா பாராட்டினார். இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதி எடுத்துக்கொண்டனர் என நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டார்.