பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் 044- 2538 1390 அல்லது 2538 1392 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.